வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய் வளர்க்கலாம்... பூனை.... வளர்க்கலாம்... ஆடு வளர்க்கலாம்... மாடு வளர்க்கலாம்... கழுதையைகூட வளர்க்கலாம்.
ஆனால் முதலையை வளர்க்க முடியுமா?
முழு மனிதனை ஒரே அடியாக விழுங்கி ஏப்பம் விடக் கூடிய பயங்கரமான மிருகங்களில் முதலையும் ஒன்று.
ஆனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த விக்கி என்கிற பெண் ஒன்று அல்ல ... மூன்று முதலைகளை வீட்டில் வளர்க்கின்றார்.
இவை குடும்ப அங்கத்தவர்களைப் போல் அவ்வீட்டில் புழங்குகின்றன.
இவரது மகனின் பெயர் அன்ரூ. வயது 16. அன்ரூவின் படுக்கை அறையில் படுக்கையில்கூட இவை அமர்ந்து இருக்கும். முதலைகள் மகனை விழுங்கி விடக் கூடும் என்கிற அச்சம் தாய்க்கு கிடையாது.
முதலைகளை மடியில் வைத்து கொஞ்சுவார் விக்கி. முதலைகளும் விக்கியின் அரவணைப்பில் மகிழும்.
காரில்கூட முதலைகள் ஏற்றித் திரிவார்.
முதலைகளை சங்கிலிகளில் பிணைத்து வீதியால் நடந்து செல்வார்.
இவரை ஆஸ்திரேலிய மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.
இவருக்கு முதலைப் பெண் என்று பட்டப் பெயரும் சூட்டி உள்ளார்கள்.
No comments:
Post a Comment