லியானோ டாவின்ஸியின் மோனலிஸா ஓவியத்தை 100,000 கரட் இரத்தின கற்களால் ஜொலிக்கச் செய்து உள்ளார் சீன நாட்டுக் கலைஞர் ஒருவர்.
இவரது பெயர் என்ன? என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும் இவர் நகைகளை சேகரிக்கின்றமையில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மோனலிஸா ஓவியத்துக்கு பல கலைஞர்களும் பல வழிகளை கையாண்டு மெருகூட்டி வந்து இருக்கின்றனர்.
ஆனால் உலகிலேயே அதிகம் செலவு செய்து மோனலிஸா ஓவியத்தை மெருகூட்டி இருக்கின்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கின்றார் இச்சீனக் கலைஞர்.
இவர் கடந்த 30 வருடங்களாக இரத்தின கற்களை சேகரித்து வந்து இருக்கின்றார்.
நகைகள் மூலம் வர்ணம் தீட்டும் விசேட வித்தையில் மிகவும் கை தேர்ந்தவர்.
இவரால் மெருகூட்டப்பட்ட மோனலிஸா ஓவியம் சீனாவின் சென்யாங் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment