Tuesday, January 4, 2011

தாயை சுட்டுக் கொன்ற 10 வயது மகன்!


அமெரிக்காவில் 10 வயதுச் சிறுவன் ஒருவர் சொந்த தாயை சுட்டுக் கொன்று உள்ளார்.

தாயை சுட்டுக் கொன்றமை குறித்து அயலவர் ஒருவருக்கு இவர் தெரிவித்து உள்ளார்.

இதை அடுத்து பொலிஸாருக்கு விபரம் தெரிய வந்து உள்ளது. இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆயினும் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டபோது குற்றச்சாட்டை சிறுவன் நிராகரித்து உள்ளார்.

இவரது தாய்க்கு வயது 45. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இக்கொலை இடம்பெற்று உள்ளது.

தலையில் ஒரேயொரு சூடு பட்டு இறந்து இருக்கின்றார்.

No comments:

பக்கங்கள்