வேகமாக நடக்க கூடிய முதியவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ஒத்த வயது உடைய முதியவர்களை எடுத்துக் கொண்டால் வேகமாக நடக்க முடியாதவர்களைக் காட்டிலும் வேகமாக நடக்கக் கூடியவர்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
அதற்காக வேகமாக நடக்க முடியாத முதியவர்கள் வேளைக்கு இறந்து விடுவார்கள் என்பது அர்த்தம் அல்ல. வேக நடை இளமைத் துடிப்பை ஊக்கிவித்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்பதும் இதன் பொருள் அல்ல.
உண்மை என்ன என்று சொன்னால் ஒரு முதியவர் வேகமாக நடக்க கூடியவராக இருக்கின்றார் என்றால் அவரின் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், உடல் உறுப்புக்களின் செயல்பாடு ஆகியன சீராக இருக்கின்றன என்கிற முடிவுக்கு வர முடியும்.
ஆக, முதியவர் ஒருவரின் வேக நடை அவரின் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்பதையே இந்த ஆய்வின் முடிவு கூறுகின்றது.
அதாவது முதியவர் ஒருவரின் நடையின் வேகம் அவரது தேக ஆரோக்கியத்தை கட்டியம் கூறும்.
No comments:
Post a Comment