Thursday, March 31, 2011

நிர்வாண ஓட்டத்துக்கு தயாராகும் இந்திய அழகி


இந்திய கிறிக்கெற் அணி உலக கிண்ணத்தை இம்முறை கைப்பற்றுகின்ற பட்சத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பிறந்த மேனியாக ஓடுவார் என்று வீர சபதம் செய்து உள்ளார் அந்நாட்டு நட்சத்திர அழகிகளில் ஒருவரான பூனம் பாண்டே.


உலக கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் சனிக்கிழமை மும்பையில் இடம்பெற உள்ளது.


பூனம் பாண்டேக்கு வயது 20. இந்தியாவின் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்து வருகின்ற சூப்பர் அழகிகளில் ஒருவர். கிறிக்கெற் பைத்தியமும் ஆவார்.


இந்திய சட்ட திட்டங்கள், இந்திய கிறிக்கெற் வாரியம் ஆகியன அனுமதிக்கும் பட்சத்தில் இச்சபதத்தை நிறைவேற்றியே தீருவார் என்று உறுதியாக தெரிவித்து உள்ளார். விளம்பரம், புகழ் ஆகியவற்றுக்காக அன்றி இந்திய அணியை ஊக்குவிக்கின்றமைக்காக மாத்திரமே இக்கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார் என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.


கடந்த வருடம் உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. அக்கிண்ணத்தை பராக்குவே நாட்டு அணி கைப்பற்றுகின்ற பட்சத்தில் தலைநகர வீதியில் நிர்வாணமாக ஓடுவார் என்று அறிவித்து இருந்தார் அந்நாட்டு சூப்பர் அழகி லாரிஸா ரிக்லைம். ஆனால் பராக்குவே அணி தோல்வி கண்டு விட்டது.


இந்நிலையில் லாரிஸாவின் பாணியில் ஓட்டத்துக்கு தயாராகின்றார் பூனம். 

பிராக்களை திருடும் காகங்கள்

எத்தித் திருடும் அந்தக் காக்கா- அதற்கு இரக்கப்பட வேண்டும் அடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார்.

எத்தித் திருடுவது காக்காவின் பொது இயல்பு.

ஆனால் மலேசிய நாட்டுக் காகங்களின் திருட்டு மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றது.


மலேசிய காகங்கள் கூடுகளை கட்டுவதற்காக பிராக்கள், உள்ளாடைகள் ஆகியவற்றை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் பல வீடுகளில் பிராக்கள், உள்ளாடைகள் போன்றன மர்மமான முறையில் தொடர்ச்சியாக காணாமல் போய் இருக்கின்றன.

இக்குற்றவாளியை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

ஆனால் இத்திருட்டு காகங்களின் கைவரிசை என்று அறிய வந்தது.

இது அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இக்காகங்களை சுட்டு வீழ்த்த நிபுணர் குழு ஒன்றுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Wednesday, March 30, 2011

யோகாசனம் செய்யும் நாய்கள்



நாய்கள் யோகாசன அப்பியாசங்களை நன்றாகவே செய்கின்றன.


நாய்களுக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க என இந்தியாவில் குரு குலங்கள் இருக்கின்றன.


யோகி யொர்கி பர்க்ஜன் என்பவர்தான் நாய்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கின்ற திட்டத்தின் பிதாமகர்.


இத்திட்டத்தை பிரபல புகைப் படக் கலைஞர்களில் ஒருவரான டான் பொரிஸ் என்பவர் வெகு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.


இவர் நாய்களுக்கு மாத்திரம் அன்றி பூனைகளுக்கும் யோகாசன அப்பியாசங்களை பயிற்றுவித்து வருகின்றார்.


இம்முயற்சிகளில் முழு வெற்றியும் கண்டு உள்ளார்.


பியரில் குளிக்கும் பெண்கள்!



நீங்கள் பியர் பிரியரா? 




அப்படி என்றால் நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செக் குடியரசு நாட்டில் அமைந்து இருக்கும் பியர் பிரியர்களின் சொர்க்கத்துக்கு சென்றே ஆக வேண்டும்.



இச்சொர்க்கத்தின் பெயர் Chodovar.


இது ஒரு தனி இராச்சியம் மாதிரிதான். 


ஆடம்பர ஹோட்டல்.


ஆனால் இந்த இராச்சியத்தில் எங்கு பார்த்தாலும் பியர் மயம்தான்.


குழாய்களை திறக்கின்றபோது தண்ணீர் வராது, பியர்தான் வரும்.


பியர் என்றால் குடிக்கின்றமைக்கு மாத்திரம்தான் என்று நினைத்து விடாதீர்கள்.


இங்கு பியர் குளியல் மிக விசேடமான அம்சம்.


பியரால் நிரப்பட்ட தொட்டிகளுக்குள் குளித்துக் கொண்டே பியரைக் குடிக்கலாம்.


பியர் குடிக்க இச்சொர்க்கத்துக்கு வருகின்ற பெண்கள் பியர் குளியலைப் பெரிதும் விரும்புகின்றனர்.


உலகின் விசித்திரமான பாலியல் சட்டங்கள்


உலக நாடுகள் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாலியல் சட்டங்கள் வித்தியாசமானவை.



விநோதமானவை.


விசித்திரமானவை.


இச்சட்டங்களை உணர்த்தும் ஏழு படங்களை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.


விளக்கங்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டு உள்ளன.


Tuesday, March 29, 2011

பிறப்புறுப்புக்களின் வடிவத்தில் சுடலையில் தூபிகள்


ஈரான் நாட்டின் வட பகுதியில் அமைந்து இருக்கின்றது காலித் நபி மயானம்.

இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து இழுக்கும் சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது.


குறிப்பாக இளம் தலைமுறையினரின் கவனத்தை பெரிதும் கவர்ந்து உள்ளது.

காரணம் இங்கு நாட்டப்பட்டு இருக்கும் நினைவுத் தூபிகள்.

இத்தூபிகள் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.


குறைந்தது 600 பேர் இங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று தூபிகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டு உள்ளது.


இறை தூதர் முஹமட் நபி அவதரிக்கின்றமைக்கு 40 வருடங்களுக்கு முன் தோன்றிய இறை தூதர் காலித் நபியின் நினைவுத் தூபியும் இங்குதான் உள்ளது.

இதனால்தான் காலித் நபி மயானம் என்று இச்சுடலை அழைக்கப்படுகின்றது.


ஆனால் இளம் தலைமுறையினர் அடங்கலாக உல்லாசப் பயணிகளை இம்மயானம் பெரிதும் கவர்ந்து இழுப்பதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கின்றது.


அது என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?


இங்கு நினைவுத் தூபிகள் ஆணுறுப்புக்கள், பெண்ணுறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவத்தில் அமைக்கப்பட்டுருக்கின்றன என்பதே அக்காரணி.


இச்சுடலையைப் பாலியல் சுடலை என்றும் அழைக்கலாம் போலும்.


Restaurant இல் இருந்து Breastaurant நோக்கி..!


Restaurant என்றால் என்ன? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உணவகம் என்று தமிழில் சொல்வோம்.

ஆனால் அண்மைய காலங்களில் மேலைத்தேய நாடுகளில் Breastaurant மிகவும் பிரபலம் ஆகி வருகின்றது.


Breastaurant என்பதற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம்? என்பதை புத்திஜீவிகள், அறிஞர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.



ஆனால் Breastaurant குறித்த விளக்கங்களை எம்மால் தர முடியும்.


ஆண் வாடிக்கையாளர்களை கவர்கின்றமைக்கான மிகப் பெரிய தந்திரம் இது.


இங்கு கடமையாற்றும் சிப்பந்திகள் பெண்கள். இவர்கள் மார்பகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிந்து இருப்பர். அதுவும் அரைகுறை ஆடைகள்.


இவர்களின் மேலழகு கண்களுக்கு விருந்து படைக்கும்.


இதனால்தான் இதயங்களால் இங்கு உணவு பரிமாறப்படுகின்றது என்று புகழப்படுகின்றது.


பக்கங்கள்