Friday, December 31, 2010

கடலில் மனித மீன்!


இது ஒரு வித்தியாசமான ஜந்து என்று நினைத்து விட வேண்டாம்.

 மீனின் தலையை அணிந்துகொண்டு மனிதன் ஒருவர் தாய்லாந்து கடலில் நீந்தி இருக்கின்றார்.

அப்போது நீர் மூழ்கி கமராவை பயன்படுத்தி பிரிட்டன் நாட்டு உல்லாசப் பயணி ஒருவர் எடுத்துக் கொண்ட படம்.

உல்லாசப் பயணி முன்கூட்டியே தீர்மானித்து இப்படத்தை எடுத்து இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

பலூனில் காம விளையாட்டு!


காமசூத்திரா நூலை சிறுவர்கள் பார்வையிடாமல் பெரியவர்கள் மறைத்து வைக்கின்றமை வழக்கம்.

ஏனெனில் இது வயது வந்தவர்களுக்கு மாத்திரம் உரிய புத்தகங்களில் ஒன்று.

ஆனால் காமசூத்திரா இனி மேல் சிறுவர்களின் பார்வைக்கு பட்டு விடுமா? என்று அஞ்சத் தேவை இல்லை.


ரஷிய நாட்டு கலைஞர் ஒருவர் காமசூத்திராவை மனதில் வைத்து கார்டூன் தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

சொந்த கற்பனையையும் கலந்து உள்ளார்.


பலூன்களை பயன்படுத்தி பாத்திரங்களை வடிவமைத்து உள்ளார்.

பெரியவர்களுக்கு மாத்திரம் சங்கதி புரியும்...

பெண்களின் தலைகளில் மிருகங்கள்!


யப்பானிய பெண்கள் தலைகளில் மிருகங்களை சுமக்கின்றமையை விரும்புகின்றனர்.


கொடிய காட்டு மிருகங்கள்கூட இவர்களின் தலைகளில் அமைதியாக அமர்ந்து இருக்கின்றன.


இம்மிருகங்கள் தலைகளில் அமர்ந்து இருக்கின்றமை அழகாகவும், விநோதமாகவும் உள்ளது.


கீ போர்ட் உருவத்தில் கோப்பைகள்!


கீ போர்ட் வடிவத்தில் ஆன கோப்பைகள் சீன நாட்டு சந்தைகளில் புதிதாக அறிமுகம் ஆகி உள்ளன.


இவற்றை மக்களுக்கு பரிச்சயப்படுத்தும் நடவடிக்கைகளில் விற்பனை முகவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.


இவை மக்களைப் பெரிதும் கவரும் என்று பெரிதும் நம்பப்படுகின்றது.

பாடம் நடத்தும் ரோபோக்கள்!


தென்கொரிய நாட்டில் உள்ள முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆங்கில பாடம் கற்பித்துக் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.

30 ரோபோக்கள் வரை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

 ரோபோ கைத்தொழில் துறையை வளர்த்து எடுக்கும் நிகழ்ச்சி நிரலின் கீழ் இத்திட்டம் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆசிரிய ரோபோக்களில் ஒருவருக்குப் பெயர் இங்கேய்.

முட்டை வடிவத்தில் ஆன உருவம் உடையவர். வெள்ளை நிறம் கொண்டவர்.


டேய்கு நகரத்தில் உள்ள 21முன்பள்ளிகளில் கற்பிக்கின்றார்.

ஆசிரிய ரோபோக்களினது உயரம் ஒரு மீற்றர்.

இவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு  TV display panel பொருத்தப்பட்டு உள்ளது.

நடமாடும சக்கர கால்கள் நான்கை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களால் இக்கால்களின் துணையுடன் நடந்து திரிகின்றமை முடியும்.

 இந்த ரோபோக்களுக்கு புத்தகங்களை வாசிக்கின்றமைக்கும், பாடல்களுக்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைக்கின்றமைக்கும், கால்களை ஆட்டி நடனமாடுகின்றமைக்கும் முடியும்.

ஒவ்வொருவருக்கும் அழகான பெண்களின் முகம் ஒவ்வொன்று கொடுக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஆங்கில் ஆசிரியர்கள் ஏராளமானோர் தென்கொரியாவில் உள்ளனர்.

இவர்கள் ரிமோட் கொன்ரோல் மூலம் ரோபோக்களை இயக்குகின்றனர்.

கமராக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு ஆசிரியர்களின் முக பாவங்களை உள்வாங்கி ரோபோக்களில் வெளிப்படுத்துகின்றன.


பாடம் கற்பித்துக் கொடுக்கின்றமை மட்டுமன்றி ஆசிரிய ரோபோக்கள் மாணவர்களுக்கு நடனம், விளையாட்டு ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

ஆசிரிய ரோபோக்களின் அறிமுகத்துக்கு முன்பள்ளி மாணவர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இதனால் கல்வி மீதான விருப்பம் இம்மாணவர்கள் மத்தியில் அதிக்ரிக்கும் என்று தென்கொரிய நிபுணர்கள் நம்புகின்றனர்.

கழிவறைக்குள் பாலியல் கல்வி!


சீனாவில் உள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் போதிக்க புதுமையான முறை ஒன்று அறிமுகம் ஆகி உள்ளது.

ஆண் மாணவர்களின் கழிவறையில் பெண் மாணவர்களையும், பெண் மாணவர்களின் கழிவறைகளில் ஆண் மாணவர்களையும் சிறுநீர் கழிக்க செய்கின்றமை மூலம் பாலியல் அறிவை ஊட்ட முடியும் என்று அந்நாட்டு நிபுணர்கள் அறிவித்து உள்ளனர்.

பாலியல் கல்வியின் முதலாவது பாடமாக இம்முறை நடைமுறைக்கு வந்து உள்ளது.

" சிறுவர்கள் எதிர்ப் பாலாரின் கழிவறைகளுக்குள் அப்படி என்ன வித்தியாசம் உள்ளது என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளனர். பாலியல் நடத்தைகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? என்பதை இம்முறை மூலம் உணர வைக்க முடியும். " 

இவ்வாறு இந்நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

தரம்-01 முதல் தரம் -6 வரை பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியானது கரு உருவாதல் என்கிற பாட விதானத்தில் இருந்து கற்பிக்கப்படுகின்றது.




Thursday, December 30, 2010

யோகா ஆசிரியரின் பாலியல் அடிமைகள்!


யோகாசனம் பயில சென்ற மூன்று பெண்கள் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாலியல் அடிமைகள் போல் மலேசியாவில் நடத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ஒருவர் கர்ப்பம் தரித்து விட்டார்.

யோகா ஆசிரியருக்கு வயது 54. பெண்களில் ஒருவருக்கு 20 வயது. மற்றவர்களுக்கு 16 வயது.

யோகா ஆசிரியர் வீட்டு அறை ஒன்றில் கட்டில் ஒன்றுடன் சேர்த்து இவர்களைக் கட்டிப் போட்டு இருக்கின்றார்.

தொடர்ச்சியாக பல தடவைகள் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார்.

பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருக்கின்றார்.

இப்பெண்களை கண்டு பிடிக்க பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.

கடந்த புதன்கிழமை இவ்வீட்டை முற்றுகையிட்டு மூவரையும் மீட்டனர். 

யோகா ஆசிரியரைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மூன்று பெண்களும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஒருவர் கர்ப்பம் தரித்து இருக்கின்றமை அப்போதுதான் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கர்ப்பம் தரித்து இருப்பவர் யார்? என்பது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

Wednesday, December 29, 2010

பெண்ணின் எக்ஸ்ரேயில் யேசுவின் உருவம்!


அமெரிக்க பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்துவின் உருவப் படம் தென்படுகின்றது.

புற்று நோயாளிகளில் ஒருவரான Karen Sigler என்கிற பெண் வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி எக்ஸ்ரே படம் எடுத்து இருந்தார்.

இவர் இப்படத்தை பார்வையிட்டார்.

அப்பொழுதே யேசுநாதரின் உருவத்தை படத்தில் கண்டு கொண்டார்.


ஆனாலும் சிலரால் இவ்வுருவத்தை அவதானிக்க முடியவில்லை.

இவ்வுருவம் தெளிவாக தென்படும் பட்சத்தில் எப்படி இருக்கும்? என்பதையும் வாசகர்களுக்கு காண்பிக்கின்றோம்.


கொலையில் முடிந்த செக்ஸ் விளையாட்டு!


அமெரிக்காவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பாலியல் உறவு படுகொலையில் முடிந்து உள்ளது.

23 வயது உடைய Arthur Sedille என்பவர் 50 வயது உடைய மனைவியுடன் வீட்டில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தார்.

இவர் கற்பனை கலந்த செக்ஸில் மிகுந்த நாட்டம் உடையவர்.

துப்பாக்கி மூலம் மனைவியை மிரட்டி செக்ஸ் வைத்துக் கொள்கின்றமை போல் கற்பனை செய்து கொண்டார்.

துப்பாக்கிக்குள் தோட்டா இருக்கின்றமையை இவர் அறிந்து இருக்கவில்லை.

உல்லாசம் கொடுத்த உற்சாகத்தில் துப்பாக்கியை மனைவியின் மண்டையில் வைத்து இயக்கினார்.


சூடு பட்டு படுக்கை அறையிலேயே மனைவி இறந்து விட்டார்.

இவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இது ஒரு விபத்து என்பதை விளங்கப்படுத்தினார்.

செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதும் மனைவியுடன் இவ்வாறு வழமையாக நடந்து கொள்வார் என்று கூறி இருக்கின்றார்.

பொலிஸ் விசாரணைகளுக்கு இவர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

இவர் மீது படுகொலைக் குற்றச்சாச்சு சுமத்தப்பட்டு உள்ளது.

80 வயது மனைவியை கருணைக் கொலை செய்தவர்!


தாய்வானில் 83 வயது முதியவர் ஒருவர் பார்கின்சன் நோயால் அவலப்பட்டுக் கொண்டிருந்த 80 வயது மனைவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணைக் கொலை செய்து உள்ளார்.

இவரின் பெயர் Wang Ching-hsi. ஓய்வு பெற்ற பொறியியலாளர். 

மனைவியை கருணைக் கொலை செய்யப் போகின்றார் என்று இவர் ஏற்கனவே சொந்த இணையத் தளத்தில் விளக்கமாக எழுதி இருந்தார்.


மனைவிக்கு நித்திரை குளுசைகள் கொடுத்தார். பின்னர் ஸ்கூட் ரைவர் கருவியை மண்டை ஓட்டின் மேல் வைத்து சுத்தியலால் அறைந்து இருக்கின்றார்.

பொலிஸில் இவர் சுயமாகவே சரண் அடைந்து உள்ளார்.

இத்தம்பதிக்கு இரு புதல்வர்கள். பிள்ளைகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர். இவர்தான் மனைவியை பராமரித்து வந்திருக்கின்றார். இவரின் மனைவிக்கு காலில் முறிவும் உண்டு.

முதிய வயதில் நோய்களால் வருந்துகின்றமையை இத்தம்பதி விரும்பி இருக்கவில்லை.

ஒன்றாக தற்கொலை செய்கின்றமை குறித்துக்கூட இருவரும் ஆலோசித்து வந்திருக்கின்றனர்.

 Wang Ching-hsi இணையத்தில் பல சந்தர்ப்பங்களில் இவை குறித்து எல்லாம் எழுதி வந்திருக்கின்றார்.

" நாங்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தோம். இவ்வாழ்க்கை போதுமானது. உயிரை மாய்க்கின்றமை குறித்து  சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இருவரும் கலந்தாலோசித்து இருக்கின்றோம். எனக்கு முன் அவர் இறப்பாரானால்  அது அவரின் அதிஷ்டம் என்றுதான் கூற முடியும்.  தேவை ஏற்பட்டால் கருவி ஒன்றின் மூலம் மண்டை ஓட்டை துளைப்பேன். " 

இவ்வாறு கடந்த 05 ஆம் திகதி இணையத்தில் எழுதி இருந்தார்.

தாய்வானில் கருணைக் கொலை ஒரு குற்றச் செயலாகும். என இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

கணவனால் மூன்று மாத கர்ப்பிணி படுகொலை!


இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் மூன்று மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கணவனாலும், கணவனின் வீட்டாராலும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பெண்ணின் பெற்றோர் வாக்குறுதி வழங்கி இருந்தபடி சீதனம் வழங்கத் தவறியமையால் மாப்பிள்ளை வீட்டார் இப்படுகொலையை செய்து உள்ளனர்.

இப்பெண்ணின் பெயர் சரிதா.

கொன்று விட்டு சடலத்தை தூக்கில் போட்டு இருக்கின்றனர்.

இம்மரணம் ஒரு தற்கொலை என்று ஏனையோரை நம்ப வைக்க முயன்றனர்.

பெண்ணின் மரணத்தில் மாப்பிள்ளை வீட்டார் மீது சந்தேகம் உண்டு என்று பொலிஸாருக்கு பெண்ணின் தகப்பன் முறைப்பாடு செய்தார்.

இதை அடுத்து பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டனர்.

Tuesday, December 28, 2010

94 வயதில் தந்தை ஆகி இந்தியர் உலக சாதனை!!


உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார்.

இவரின் பெயர் ராமஜித் ராகவ். வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார். அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார்.

இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார்.

சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. 

இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர்.

குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு சொந்தமாக இரண்டு பசுக்கள் உள்ளன. ஓய்வூதியம் பெறுகின்றனர். நாட்கூலிக்கு வேலை செய்கின்றார்கள். வேறு வாழ்வாதாரம் கிடையாது.

ராகவ்வின் சொந்த இடம் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் உள்ள பெக்வூர் என்கிற கிராமம். குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சொந்த ஊரை விட்டு வெளியேறினார்.

ஆரம்பத்தில் இவர் வீடுகளில் உதவியாளாக வேலை பார்த்தார். கடந்த 22 வருடங்களாக தற்போதைய விவசாயப் பண்ணையில்தான் வேலை பார்க்கின்றார்.

இவர் இளமைக் காலத்தில் ஒரு பயில்வானாக இருந்துள்ளார். அந்நாட்களில் நாளாந்தம் மூன்று கிலோகிராம் நிறையுடைய பால், அரைக் கிலோகிராம் பாதாம் பருப்பு, அரைக் கிலோ வெண்ணெய் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட்டு வந்து இருக்கின்றார். இதுவே நீண்ட ஆயுளின் இரகசியம் என்கின்றார்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நானு ராம் என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு 90 வயதில் 22 ஆவது குழந்தைக்கு தந்தையாகி இருந்தார். இவரது சாதனையைமுறியடித்தே அதிக வயதில் தந்தை ஆனவர் என்கிற பெருமைக்கு ராகவ் சொந்தக்காரர் ஆகி உள்ளார்.

கள்வனை காட்டிக் கொடுத்த மொபைல்!


பக்கத்து வீட்டில் திருடச் சென்ற ரோமானிய நாட்டு இளைஞன் ஒருவரை அவரின் கையடக்கத் தொலைபேசியே காட்டிக் கொடுத்து உள்ளது.

இவருக்கு வயது 18. வீட்டுக்காரர்களான தம்பதியர் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

இளைஞன் திருட்டில் மும்முரமாக இறங்கி இருந்தார். போதாத காலம் அந்நேரம் பார்த்து இளைஞனின் கையடக்கத் தொலைபேசி ஒலித்து இருக்கின்றது.

கணவனும், மனைவியும நித்திரை கலைந்து எழுந்தனர்.

வீட்டுக்குள் அன்னியன் ஒருவர் நுழைந்து இருக்கின்றார் என்பதை உணர்ந்தனர்.

இளைஞனை மடக்கிப் பிடித்தனர். பொலிஸில் ஒப்படைத்தனர்.

இதற்கு முன்னரும் அயலவர் வீட்டில் திருட இவ்விளைஞன் முயற்சித்து இருக்கின்றார் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்கள்.

இளைஞன் ஐந்து வருடங்கள்வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

கணவனின் அன்பை சோதித்தவர் கம்பி எண்ணுகின்றார்!


கணவனின் பாசத்தை சோதிக்கின்றமைக்காக கடத்தப்பட்டவர் போல் நடித்த ஸ்பெய்ன் நாட்டு பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கடத்தல்காரர்களில் ஒருவரைப் போல் கணவனுக்கு தகவல் அனுப்பி இருந்தார். கைகள், கால்கள் கட்டப்பட்ட சொந்தப் போட்டோ ஒன்றையும் அனுப்பி இருந்தார். 20,000 யூரோ கப்பம் கோரி இருந்தார். பொலிஸுக்கு முறையிடக் கூடாது என்றும் எச்சரித்து இருந்தார்.

ஆனால் கணவன் இந்த எச்சரிக்கையை புறக்கணித்தார். பொலிஸுக்கு முறையிட்டார்.

பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை நடத்தினர். பெண்ணை நேற்று கண்டு பிடித்தனர்.

கணவனின் அன்பை சோதிக்கின்றமைக்காக கடத்தப்பட்டவர் போல் நடித்து இருந்தார் என்று பொலிஸாருக்கு இப்பெண் வாக்குமூலம் வழங்கினார்.

இதை அடுத்து இப்பெண்ணை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் போட்டு உள்ளார்கள்.

உலக சாதனைக்காக பெரும் தீனி சாப்பிடுபவர்!


உலகின் குண்டுப் பெண் என்கிற கின்னஸ் சாதனையை நிலைநாட்ட துடிக்கும் அமெரிக்கப் பெண் டொன்னா சம்ப்சன் ( வயது-46 ) நத்தார்ப் பண்டிகைக் கால இராப் போசனமாக 30,000 கலோரிப் பெறுமானம் கொண்ட உணவை சாப்பிட்டு உள்ளார்.

இவர் சாப்பிட்ட பண்டங்கள் கீழ்வருமாறு:-


2 portions of 25lb oven roasted turkeys 
2 portions of 15lb maple glazed hams
10lbs of roast potatoes
5lbs of mashed potatoes
5lbs of chopped carrots
5lbs of sweetcorn
5lbs of roasted butternut squash
5 parcels of house-baked bread
4 pints of cranberry relish
4 pints of home-made gravy
5lbs of herbed stuffing
1 tray of mixed green salad including salad dressing.


இவர் சாப்பிட்ட இந்த உணவு டசின் கணக்கானோருக்கு போதுமானது.

இவரின் தற்போதைய நிறை 292 கிலோகிராம்.

இவர் உலகின் குண்டுப் பெண் ஆகின்றமைக்கு 453.5 கிலோகிராம் நிறை உடையவர் ஆதல் வேண்டும்.

ஆகவேதான் பெரும் தீனி சாப்பிட்டு வருகின்றார்.

உலகின் மிகப் பருமனான தாய் என்கிற கின்னஸ் சாதனையை இவர் ஏற்கனவே நிலைநாட்டி உள்ளார்.


Monday, December 27, 2010

ஆறு வயதில் யோகாசன ஆசிரியர்!


உலகில் உள்ள யோகாசன பயிற்றுவிப்பாளர்களில் மிகவும் வயது குறைந்தவராக இந்தியாவின் அஷ்ரம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.


இவரின் பெயர் Shruti Pandey.

இவர் குழந்தையாக இருக்கும்போதே யோகாசனத்தை முறையாக குரு ஒருவரிடம் இருந்து பயின்றார்.


நான்கு வயதில் யோகாசனத்தில் மேதை ஆனார். 

மிகவும் சிரமமான ஆசனங்களைக்கூட இலகுவாகவும், நேர்த்தியாகவும் செய்யும் வல்லமை உடையவர்.


கடந்த இரண்டு வருடங்களுக்காக யோகாசன வகுப்புக்களை நடத்தி வருகின்றார்.


வயதில் பெரியவர்கள் பலரும் இவரிடம் பயில்கின்றனர்.


மனைவியின் மின்னஞ்சலை பார்வையிட்டமை குற்றமா?


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்ட் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவர் மனைவியின் மின்னஞ்சலை கள்ளத்தனமாக பார்வையிட்டமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் Leon Walker.

வீட்டில் இவரும், மனைவியும் ஒரு மடிக் கணனியைத்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

மனைவிக்கு ஜீ-மெய்ல் கணக்கு ஒன்று உண்டு.  இக்கணக்குரிய இரகசிய கடவுக் குறியீட்டை பயன்படுத்தி மனைவியின் மின்னஞ்சலை திறந்து பார்வையிட்டு இருக்கின்றார்.

மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு உண்டு என்பதை மின்னஞ்சல் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

இந்நிலையில் இவருக்கு எதிராக மனைவி சட்ட நடவடிக்கை எடுத்து உள்ளார்.

குற்றவாளியாக காணப்பட்டால் குறைந்தது ஐந்து வருட கடூழிய தண்டனையை இளைஞன் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இது ஒரு விசித்திரமான வழக்கு என்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றார்.

இவரிடம் இருந்து மனைவி இம்மாத ஆரம்பத்தில் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வேலை இல்லாதவர்களுக்கு யோகாசனம்!


வேலை எதுவும் இல்லாதவர்கள் யோகாசனம் செய்கின்றமை அழுத்தங்களில் இருந்து விடுபட உதவும் என்று அமெரிக்கர்கள் அண்மைய நாடகளில் பெரிதும் நம்பி வருகின்றனர்.

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் உள்ள columbus நகரத்தில் உள்ள நிறுவனம் ஒன்று வேலை இல்லாத இளைஞர்கள், யுவதிகள் ஆகியோருக்கு இலவச யோகாசன வகுப்புக்களை நடத்துகின்றது.


யோகாசனத்தால் உடலும், உள்ளமும் அமைதி அடையும் என்கின்றார் பயிற்றுவிப்பாளர்.

கலியாண வீட்டில் காணாமல் போன மாப்பிள்ளை!


திருமண நாள் அன்று எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன சீன இளைஞன் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த மே மாதம் 01 ஆம் திகதி Tian என்கிற இளைஞனுக்கும், தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணத்துக்கு ஏற்பாடாகி இருந்தது.

ஆனால் அன்றைய தினம் எவரும் எதிர்பார்த்து இராத வகையில் மணமகன் தலைமறைவாகி விட்டார்.

மணமகளுக்கும், பெண் வீட்டாருக்கும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கும் இது பேரதிர்ச்சியை கொடுத்தது.

மணமகன் ஏன் ஓடி மறைந்தார்? என்று மண்டையை போட்டுக் குழப்பினார் மணமகள்.

எனவே மணமகனைக் கண்டு பிடித்து ஏன் ஓடிப் போனார்? என்று கேட்க மணமகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்.

ஊடகங்கள், இணையத் தளங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மணமகனைத் தேடினார்.

மணமகனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 800,000 யுவான் வரை பணப் பரிசு தருவார் என்று அறிவித்தார்.

மணமகளின் பகீரத தேடுதல் முய்ற்சிகளை அடுத்து இளைஞன் ஒருவாறு வெளிப்பட்டார்.

சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்தமைக்கு முதலில் மன்னிப்புக் கோரினார்.

ஆனால் ஓடி ஒளிந்தமைக்கு இவர் சொன்ன காரணம்தான் எல்லோருக்கும் வியப்பை கொடுத்தது.

"பணக்கார பெண்ணை திருமணம் செய்கின்றபோது வாழ்க்கையின் நிம்மதி தொலைந்து விடும். நான் நிம்மதியை இழக்க விரும்பவில்லை. ஆகவேதான் ஓடி மறைந்தேன். "

இவ்வாறு இந்த இளைஞன் தெரிவித்தார்.

குப்பைக்குள் இருக்கும் தங்கம்!


 குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளியாக சீனாவில் கடமையாற்றும் 64 வயது  மூதாட்டி ஒருவர் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 இற்கும் அதிகமான மாணவர்களின் உயர் கல்விக்கு தேவையான நிதியை கடந்த 12 வருடங்களாக வழங்கி வருகின்றார்.

இவரின் பெயர் Li Yukun. 50 வயதில் இவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி இவ்வேலையை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார். காரணம் இவ்வேலை மூலம் கிடைக்கின்ற சம்பளத்திலேயே மாணவர்களுக்கு தேவையான நிதியை தவறாமல் கொடுத்து வருகின்றார்.

இதை விட இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும், நலிந்தவர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக 100,000 யுவான் வரை செலவு செய்து உள்ளார்.


ஆனால் சுய அடையாளங்களை வெளிப்படுத்தாமலேயே உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவரிடம் கடந்த நான்கு வருடங்களாக நிதி பெற்று வரும் பல்கலைக்கழக மாணவிகளில் ஒருவர் Kang Yujing.

இம்மாணவிக்கு வருடாந்தம் 1000 யுவான் அனுப்பி வருகின்றார்.

Li என்கிற கோடீஸ்வர அங்கிள்தான் இப்பெருந்தொகை நிதியை அனுப்பி வருகின்றார் என்று மாணவி எப்போதும் நம்பி வந்து இருக்கின்றார்.

ஆயினும் ஒருவாறு மோப்பம் பிடித்து மூதாட்டியின் அடையாளத்தை தெரிந்து கொண்டார்.

மூதாட்டியை நேரில் கண்டு நன்றி கூற வந்து இருந்தார்.

சீன வீதி ஒன்றில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டியை கண்டு கொண்டார். அப்படியே கட்டி அணைத்தார். அழுதார். ஆசிர்வாதம் பெற்றார்.


குப்பை சேகரிக்கும் வேலை இலேசுப்பட்டது அல்ல. கடினமானதுதான்.

இரும்புப் பெண் என்றுதான் மூதாட்டி Li சகபாடிகளால் அழைக்கப்படுகின்றார்.

இவர் மிகவும் எளிமையாக வாழ்பவர். சாதாரண வீடு ஒன்றில் வசிக்கின்றார்.

உடல் அவயங்களை மரணத்தின் பின்னர் தானம் செய்ய தீர்மானித்து உள்ளார்.

மனித உறுப்பாக செயல்படும் ரோபோ இயந்திர கவச ஆடை!


உடல் உறுப்புக்களில் ஊனம் அல்லது இயலாமை உடையவர்களுக்கு நல்ல காலம் பிறந்து உள்ளது.

யப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் இவர்கள் ஏனைய சாதாரண மனிதர்களைப் போல் செயல்பட கூடிய நிலைமை உருவாகி உள்ளது.

ரோபோ இயந்திர கவச ஆடை மூலம் இச்சாதனை சாத்தியம் ஆகி உள்ளது.

மூளைக்கும் இக்கவச ஆடைக்கும் இடையில் இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மூளையின் கட்டளைப்படி கவச ஆடை செயல்படும்.


மனித உறுப்புக்கள் செய்கின்ற வேலையை இந்த கவச ஆடை செய்து கொள்ளும்.

அதாவது காலில் ஊனம் அல்லது இயலாமை உடைய ஒருவர் நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்.

இத்தகவல் மூளையில் இருந்து கவச ஆடைக்கு பரிமாறப்படும். 

கவச ஆடை அவ்வுத்தரவை ஏற்று செயல்படும். 

இதன் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்ள் முழுமையாக வெற்றி பெற்று உள்ளன.

யப்பானில் உள்ள சுமார் 50 வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் இந்த இயந்திர ஆடைகள் பாவனைக்கு வந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு இந்த இயந்திர ஆடைகள் சந்தைக்கு வரும்.

இவை மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.

ஒரே நேரத்தில் இரு வானவில்கள்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒரே நேரத்தில் இரு வானவில்கள் அவதானிக்கப்பட்டன.

கடந்த 22 ஆம் திகதி கடும் மழை இந்நகரத்தில் பெய்தது.


அப்போதே இந்த அதிசய காட்சி தென்பட்டது.

பக்கங்கள்