இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவன் ஆண் அல்லன்-இன்னொரு பெண் என்பதை சுமார் ஒரு வருடத்தின் பின் கண்டுபிடித்து இருக்கின்றார்.
Minati Khatua (வயது-26) என்கிற பெண்ணுக்கும் Sitakant Routray (வயது-28) என்பவருக்கும் இடையில் திருமணம் இடம்பெற்று இருந்தது.கார், நகைகள், சொத்துக்கள் என்று சீதனம் பெற்றுத்தான் Sitakant Routray திருமணம் செய்து இருந்தார்.
ஆனால் இருவருக்கும் இடையில் உடலுறவு என்பது இடம்பெறவே இல்லை. சமயம், விரதம், சாமிக் குற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொல்லி Routray நழுவி வந்தார்.
இதனால் Minati இற்கு Routray மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது. அங்கப் பரிசோதனையில் இறங்கினார்.பகீரத முயற்சிகள் மேற்கொண்டார். நீண்ட கால முயற்சி பலித்தது.
Routray குளித்துக் கொண்டிருந்தபோது Minati முழுப் பலத்தையும் பிரயோகித்து குளியல் அறைக் கதவைத் திறந்தார். கணவன் ஆண் அல்லன் -இன்னொரு பெண்ணேதான் அங்கு கண்ட காட்சியைக் கொண்டு உறுதிப்படுத்தினார்.
ஒரிஸா மாநில பொலிஸார் இது சம்பந்தமாக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
1 comment:
வித்தியாசமான ஒரு செய்தி..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
Post a Comment