தென்கொரியா நாட்டில் இன்டநெற் கேம்களுக்கு அடிமையான 27 வயது இளம்தாய் ஒருவர் மூன்று வயது மகனைப் படுகொலை செய்து உள்ளார்.
இவர் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் வரை சாதாரணமாக விளையாடுவார்.
சம்பவ தினம் 04 மணித்தியாலங்கள் வரை விளையாடி இருக்கின்றார். இக்குழந்தை நிலத்தில் சிறுநீர் கழித்து விட்டு அழுது இருக்கின்றான்.
இதனால் இவரின் விளையாட்டுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு விட்டது. ஆத்திரத்தில் அறிவு இழந்த இவர் கழுத்தை நெரித்துக் குழந்தையை கொன்று விட்டார்.
சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருந்தார். உறவினர் ஒருவர் சடலத்தை கண்டு பிடித்தமையை அடுத்து இத்தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு ஒரு வயதில் இன்னொரு குழந்தை உண்டு.
தென்கொரியாவில் இன்டநெற் கேம்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இன்டநெற் கேம்கள் விளையாட வேண்டாம் என்று தடுத்த தாயை 15 வயதுச் சிறுவன் ஒருவன் கடந்த மாதம் இங்கு படுகொலை செய்துள்ளான். பின் அவனும் தற்கொலை செய்து கொண்டான்.
1 comment:
மன்நோயின் உருவாக்கம்.. ஊடகங்களில் இருந்து வருகின்றன.
Post a Comment